/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
புனித வெள்ளிக்கு டாஸ்மாக்கை மூட பிஷப் தலைமையில் உண்ணாவிரதம்
/
புனித வெள்ளிக்கு டாஸ்மாக்கை மூட பிஷப் தலைமையில் உண்ணாவிரதம்
புனித வெள்ளிக்கு டாஸ்மாக்கை மூட பிஷப் தலைமையில் உண்ணாவிரதம்
புனித வெள்ளிக்கு டாஸ்மாக்கை மூட பிஷப் தலைமையில் உண்ணாவிரதம்
ADDED : ஏப் 11, 2025 02:24 AM

துாத்துக்குடி:புனித வெள்ளி நாளில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, கத்தோலிக்க பிஷப் தலைமையில், நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
புனித வெள்ளி நாளில் தமிழகம் முழுதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி, கத்தோலிக்க கிறிஸ்துவ அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. துாத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட திருச்சபையின் கீழ் செயல்படும் அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கிறிஸ்துவர்கள் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி நாளில், மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி,உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. துாத்துக்குடி திரு இருதய ஆலய வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு, துாத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கினார்.
முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் மற்றும் பங்குதந்தையர்கள், அருட்சகோதரியர் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், த.வெ.க., மாவட்ட நிர்வாகி அஜிதா ஆக்னஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் பங்கேற்றுப் பேசினர். அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

