/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சீரமைக்காத பாலத்துக்கு மலரஞ்சலி செலுத்த முயன்ற பா.ஜ.வினர் கைது
/
சீரமைக்காத பாலத்துக்கு மலரஞ்சலி செலுத்த முயன்ற பா.ஜ.வினர் கைது
சீரமைக்காத பாலத்துக்கு மலரஞ்சலி செலுத்த முயன்ற பா.ஜ.வினர் கைது
சீரமைக்காத பாலத்துக்கு மலரஞ்சலி செலுத்த முயன்ற பா.ஜ.வினர் கைது
ADDED : டிச 19, 2024 07:38 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், ஏரல் மற்றும் ஆத்துார் முக்காணி உயர் மட்ட பாலங்கள் சேதமடைந்தன. ஓராண்டாகியும் இதுவரை எந்தவித சீரமைப்பு பணிகளும் நடக்கவில்லை.
சமீபத்தில் பெய்த மழையால் இரண்டு இடங்களிலும் உள்ள தரைமட்ட பாலத்தில் வெள்ளம் சென்றதால் போக்குவரத்து தடைபட்டது. பழுதடைந்த பாலத்தில் ஓராண்டாகியும் சீரமைப்பு பணிகளை முடிக்காததை கண்டித்து, துாத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.,வினர், மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையில் முக்காணி ஆற்றுப் பாலத்தில் மலரஞ்சலி செலுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாகக் கூறி, ஆத்துார் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். போலீசார் எதிர்ப்பையும் மீறி, மலர் வளையத்துடன் பா.ஜ.,வினர் பாலத்தை நோக்கி சென்றதால், இருதரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
போக்குவரத்து அதிகமுள்ள முக்காணி தாமிரபரணி ஆற்று பாலத்தில் போலீசாருக்கும், பா.ஜ.,வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.