/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மூழ்கிய வாழை தோட்டங்களுக்கு படகில் சென்று தார்கள் அறுவடை
/
மூழ்கிய வாழை தோட்டங்களுக்கு படகில் சென்று தார்கள் அறுவடை
மூழ்கிய வாழை தோட்டங்களுக்கு படகில் சென்று தார்கள் அறுவடை
மூழ்கிய வாழை தோட்டங்களுக்கு படகில் சென்று தார்கள் அறுவடை
ADDED : நவ 28, 2025 11:34 PM

துாத்துக்குடி: வாழை தோட்டங்களை தண்ணீர் சூழ்ந்ததால், அறுவடைக்கு தயாரான தார்களை படகுகளில் சென்று விவசாயிகள் எடுத்து வந்தனர்.
துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணையில் லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு சென்று வருகிறது.
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தென்கால்வாயில் பாசனத்திற்காக குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
அந்த தண்ணீர் செம்மறிகுளம் கஸ்பா பகுதியில் உள்ள வாழை தோட்டங்களுக்குள் புகுந்தது. இதில், 50,000 வாழைகள் நீரில் மூழ்கின. அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
படகில் வாழை தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள், அறுவடைக்கு தயாராக இருந்த தார்களை வெட்டி, படகில் ஏற்றி கொண்டு வந்தனர்.
துாத்துக்குடி சந்தையில் போதிய விலை இல்லாததால், அறுவடை செய்த வாழைத்தார்கள் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

