/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ரூ.85 லட்சம் மோசடி செய்த வாலிபர்கள் இருவர் கைது
/
ரூ.85 லட்சம் மோசடி செய்த வாலிபர்கள் இருவர் கைது
ADDED : நவ 23, 2025 02:10 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி வாலிபரிடம், 85 லட்சம் ரூபாய் மோசடி செய்த, மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு, பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என பேஸ்புக் விளம்பரம் வந்துள்ளது.
அதில் உள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட வாலிபரிடம் பேசிய நபர்கள், ஒரு டிரேடிங் செயலி ஒன்றின் லிங்க் அனுப்பி, அந்த ஆப் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறினர். நம்பிய வாலிபர், 85 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.
பின், மோசடி செய்யப்பட்டதை அறிந்த வாலிபர், துாத்துக்குடி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், மஹாராஷ்டிராவை சேர்ந்த சந்திப் சயாஜி ரொகோகலே, 33, சோபன் டட்டு முஞ்சல், 37, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

