/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தலை துண்டான மூதாட்டியின் உடல் மீட்பு
/
தலை துண்டான மூதாட்டியின் உடல் மீட்பு
ADDED : செப் 22, 2025 04:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: துாத்துக்குடி, பண்டாரம்பட்டி சர்ச் பின்புறம் காட்டு பகுதியில், பெண்ணின் தலை, நேற்று கண்டெடுக்கப்பட்டது. சிறிது துாரத்தில் அவரின் உடலும் கண் டெடுக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன் மாயமான அவர், ஆதிபராசக்திநகரை சேர்ந்த தேவராஜ் என்பவரின் தாய் அய்யம்மாள், 75, என தெரிந்தது.
சிப்காட் போலீசார் கூறியதாவது:
மனநலம் பாதிக்கப்பட்ட அய்யம்மாள் சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். அவர் அணிந்திருந்த நகைகள் அப்படியே இருந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே விபரம் தெரிய வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.