/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
'வின்பாஸ்ட்' கார்களுக்கான வரும் 15ல் முன்பதிவு துவக்கம்
/
'வின்பாஸ்ட்' கார்களுக்கான வரும் 15ல் முன்பதிவு துவக்கம்
'வின்பாஸ்ட்' கார்களுக்கான வரும் 15ல் முன்பதிவு துவக்கம்
'வின்பாஸ்ட்' கார்களுக்கான வரும் 15ல் முன்பதிவு துவக்கம்
ADDED : ஜூலை 13, 2025 01:18 AM
துாத்துக்குடி:'வின்பாஸ்ட் நிறுவனம் தயாரிக்கும் மின்சார கார்களுக்கான முன்பதிவு வரும் 15ல் துவங்கும்' என, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் நாட்டை சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட், துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, சிலாநத்தம் பகுதியில், 4,250 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைந்துள்ளது. இம்மாத இறுதியில் அங்கு உற்பத்தி துவங்க உள்ளது.
கார்களுக்கான முன்பதிவு வரும் 15ல் துவங்கும் என, அந்நிறுவனம், தன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக பிரீமியம் மின்சார கார் மாடலான, 'விஎப் -6 மற்றும் விஎப்- 7 மாடல்' விற்பனை செய்யப்பட உள்ளதாக வீடியோவுடன் அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காருக்கான விற்பனை விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்திய சந்தை நிலவரத்தை கொண்டு முன்பதிவு துவங்கும் போது விலை விவரம் தெரிவிக்கப்படும் என, கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு, கார் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.