/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
குடும்பமாக கஞ்சா விற்ற அண்ணன், தங்கை கைது
/
குடும்பமாக கஞ்சா விற்ற அண்ணன், தங்கை கைது
ADDED : டிச 05, 2024 11:30 PM

திரேஸ்புரம் : துாத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திரேஸ்புரம் பண்டுகரை சாலையில் சந்தேகத்திற்கிடமாக வந்த பைக்கை நிறுத்தி, சோதனை செய்தனர். அப்போது, பைக்கில் வந்த இருவர், 5.5 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பைக்கில் வந்த கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த மைக்கேல்ராஜ், 30, அவரது தங்கை ஜெபா, 25, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் வந்த டூ - வீலர் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்களிடம் இருந்த, வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள பயன்படுத்திய இரண்டு மொபைல் போன்கள், கஞ்சா பொட்டலங்களை பிரித்து கொடுக்க பயன்படுத்திய எடை இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்களின் மொபைல் போன்களில் இருந்த விபரங்களின்படி, யாருக்கு அவர்கள் கஞ்சா சப்ளை செய்தனர் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.