/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
அண்ணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தம்பி கைது
/
அண்ணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தம்பி கைது
ADDED : ஜன 15, 2025 11:49 PM
துாத்துக்குடி : ஏரல் அருகே குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம் ஏரல், சிவகளை அருகே நயினார்புரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு மனைவியும், ஐகோர்ட் மகாராஜா 27, லட்சுமண பெருமாள் 24 உள்பட 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் ஐகோர்ட் மகாராஜாவுக்கு திருமணம் ஆகவில்லை. குடிப்பழக்கமும் இருந்தது. திருச்சியில் ஒரு கம்பெனியில் மிக்சர் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் வந்தார். போதையில் பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தகராறு செய்தார். தம்பி லட்சுமண பெருமாள் அண்ணனை கண்டித்தார்.இதில் ஆத்திரமடைந்த ஐகோர்ட் மகாராஜா, தம்பி லட்சுமண பெருமாளையும், அவரது மனைவியையும் அவதுாறாக பேசினார்.
இதில் ஏற்பட்ட தகராறில் ஐகோர்ட் மகாராஜாவை லட்சுமண பெருமாள் கீழே தள்ளி அவரது தலையில் கல்லை துாக்கி போட்டார். இதில் ஐகோர்ட் மகாராஜா இறந்தார். ஏரல் போலீசார் லட்சுமணப்பெருமாளை கைது செய்தனர்.

