sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

 தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சகோதரியர் பலி

/

 தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சகோதரியர் பலி

 தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சகோதரியர் பலி

 தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சகோதரியர் பலி


ADDED : பிப் 21, 2026 05:17 AM

Google News

ADDED : பிப் 21, 2026 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: தேனியை சேர்ந்த சங்கரகுமார், கேரளாவில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், குடும்பத்தினருடன், நேற்று திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு காரில் சென்றார். வழியில், ஏரல் அருணாச்சல சுவாமிகள் கோவிலில் தரிசனம் செய்த அவர்கள், தாமிரபரணி ஆற்றில் குளித்தனர்.

அப்போது, சங்கரகுமாரின் மகள்களான அபிநயா, 16, மீனாட்சி, 13, ஆகியோர் ஆர்வத்துடன் முதலில் சென்று ஆற்றில் குளித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர். அதிர்ச்சியடைந்த சங்கரகுமார், ஏரல் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீனாட்சி உயிரிழந்த நிலையில், அபிநயாவுக்கு லேசான அசைவு இருந்ததால், அவரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.






      Dinamalar
      Follow us