sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

 ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த சென்னை நபர் பலி

/

 ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த சென்னை நபர் பலி

 ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த சென்னை நபர் பலி

 ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த சென்னை நபர் பலி


ADDED : பிப் 22, 2026 06:16 AM

Google News

ADDED : பிப் 22, 2026 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: சென்னை, தண்டையார்பேட்டை, நேதாஜிநகரை சேர்ந்த வியாபாரி ரகுமான், 52, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலுக்கு நேற்று காலை வந்தார்.

வெளிநாட்டில் உள்ள மகன் கொடுத்த பொருட்களை உறவினரிடம் வாங்கிய அவர், மீண்டும் ரயிலில் சென்னை செல்வதற்காக கோவில்பட்டி ரயில் நிலையம் வந்தார்.

முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் எடுத்த அவர், காலை, 10:00 மணியளவில், குருவாயூரில் இருந்து சென்னை சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்றார்.

தடுமாறி தண்டவாளத்தில் விழுந்த ரகுமானின் வலது கால் மீது ரயில் ஏறியதில், கால் துண்டானது.

வலியால் துடித்த அவரை, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் உயிரிழந்தார். துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us