/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
நெஞ்சுவலியால் இறந்த டிரைவர் உயிர் தப்பிய பஸ் பயணியர்
/
நெஞ்சுவலியால் இறந்த டிரைவர் உயிர் தப்பிய பஸ் பயணியர்
நெஞ்சுவலியால் இறந்த டிரைவர் உயிர் தப்பிய பஸ் பயணியர்
நெஞ்சுவலியால் இறந்த டிரைவர் உயிர் தப்பிய பஸ் பயணியர்
ADDED : ஜூலை 17, 2025 03:01 AM

திருச்செந்துார்:திருச்செந்துார் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 7:00 மணிக்கு மகளிர் இலவசமாக பயணம் செய்யும் அரசு விடியல் பஸ், 60க்கும் மேற்பட்ட பயணியருடன் உடன்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. குலசேகரன்பட்டினம் அல்தாப், 48, என்பவர் அந்த பஸ்சை ஓட்டி சென்றார். பஸ் ஸ்டாண்ட் வெளியே பஸ் சென்ற போது டிரைவர் அல்தாப்புக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
நிலை தடுமாறிய பஸ் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. சாலையோரம் வேலை பார்த்த வடமாநில தொழிலாளர் சிலர் படுகாயம் அடைந்தனர். டிரைவர் அல்தாப் இருக்கையில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வட மாநில தொழிலாளர்களை துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார், மின் வாரியத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மின் கம்பத்தில் மோதிய பஸ்சை மீட்டனர். நெஞ்சுவலியால் பஸ் மின் கம்பத்தில் மோதியதில் டிரைவர் உயிரிழந்தாலும் பேருந்தில் பயணம் செய்த பயணியர் உயிர் தப்பினர்.