/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மத போதகர் மீது தாக்குதல் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு
/
மத போதகர் மீது தாக்குதல் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு
மத போதகர் மீது தாக்குதல் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு
மத போதகர் மீது தாக்குதல் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு
ADDED : அக் 16, 2024 02:25 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், பண்டாரவிளை பகுதியை சேர்ந்த ஜெகன் 41. ஆறுமுகநேரி மடத்துவிளை சி.எஸ்.ஐ., சர்ச்சில் போதகராக பணியாற்றி வருகிறார்.
ஆறுமுகநேரியில் இருந்து துாத்துக்குடியில் உள்ள சி.எஸ்.ஐ., தலைமை அலுவலகத்திற்கு நேற்று ஜெகன் காரில் சென்றார். அவருக்கு பின்னால் காரில் சென்ற சிலர் தொடர்ந்து ஹாரன் ஒலித்தபடி ஜெகனின் காரை முந்திச் செல்ல முயன்றனர். முத்தையாபுரம் பாலம் அருகே சென்றபோது திடீரென ஜெகனின் காரை வழிமறித்து நிறுத்திய 15 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கியது.
காயமடைந்த அவர் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜெகன் கூறியதாவது:
எங்களது காருக்கு வழிவிடமாட்டியா என கூறி தாக்கினர். அந்த கார்களில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோர் இருந்தனர். அவர்களது துாண்டுதலில் அந்த கும்பல் என்னை தாக்கியது. காரின் சாவியை பறித்து கீழே வீசினர். இவ்வாறு அவர் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜு மற்றும் 15 பேர் மீது முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.