ஜாதி பெயர் கூறி திட்டிய தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
ஜாதி பெயர் கூறி திட்டிய தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
ADDED : மே 13, 2026 11:38 PM
அ நிறம் | அளவு
துாத்துக்குடி: த.வெ.க., நிர்வாகியை, ஜாதி பெயர் கூறி திட்டிய, தி.மு.க., நிர்வாகி மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி நகர த.வெ.க., செயலராக இருப்பவர் சசிகுமார், 36. சில நாட்களுக்கு முன், இவரது வீட்டில் நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
அப்போது, தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியான செட்டியாபத்தை சேர்ந்த வேல்முருகன், 34, என்பவர், முதல்வர் விஜய் குறித்து அவதுாறான கருத்துகளை கூறியதாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட சசிகுமாரை, ஜாதி பெயரை கூறியும், தரக்குறைவாகவும் வேல்முருகன் பேசியதாக கூறப் படுகிறது.
சசிகுமார் புகாரில், மெஞ்ஞானபுரம் போலீசார், வேல்முருகன் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
