/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சி.ஐ.டி.யு., - பா.ஜ., மோதல் 7 பேர் மீது வழக்கு பதிவு
/
சி.ஐ.டி.யு., - பா.ஜ., மோதல் 7 பேர் மீது வழக்கு பதிவு
சி.ஐ.டி.யு., - பா.ஜ., மோதல் 7 பேர் மீது வழக்கு பதிவு
சி.ஐ.டி.யு., - பா.ஜ., மோதல் 7 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : செப் 06, 2025 09:10 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவிக்கும் போது பா.ஜ., --- கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, இருதரப்பையும் சேர்ந்த ஏழு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு, துாத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க நேற்று முன்தினம் பல கட்சியினர் சென்றனர். பா.ஜ.,வினர் மாலை அணிவிக்க சென்றபோது அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., பிரிவு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பேசிக் கொண்டிருந்தனர்.
மத்திய அரசு குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் அவர்கள் தரக்குறைவாக பேசியதாக கூறி, பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால், அந்த பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும், தனித்தனியே மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பா.ஜ., மேற்கு மண்டல முன்னாள் பொதுச் செயலர் சொக்கலிங்கம் அளித்த புகாரின் படி, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் பேச்சிமுத்து உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதுபோல, சி.ஐ.டி.யு., நிர்வாகி பேச்சிமுத்து அளித்த புகாரின் படி, பா.ஜ., நிர்வாகிகள் சொக்கலிங்கம், சுந்தர், சிவராமன் ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.