ADDED : ஜூலை 30, 2026 11:43 PM

அ நிறம் | அளவு
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு, 9:00 மணிக்கு சாத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கோவில் நிர்வாகம், பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு என்ற வாசகத்துடன் நேற்று வைத்துள்ள பதாகையில், 'கட்டண தரிசனத்திற்கு மாலை, 6:30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
பொது தரிசனத்திற்கு இரவு, 7:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். விஷேச மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன நேரம் மாறுதலுக்கு உட்பட்டது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவில் நிர்வாகம் தரப்பில், 'கோவில் நடை வழக்கம்போல இரவு, 9:00 மணிக்கு தான் சாத்தப்படும். பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
