/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
முதல்வர் ஸ்டாலின் இன்று துாத்துக்குடி வருகை
/
முதல்வர் ஸ்டாலின் இன்று துாத்துக்குடி வருகை
ADDED : பிப் 25, 2024 02:47 AM
தூத்துக்குடி:முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்.25) தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் அமையும் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வின் பாஸ்ட் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார், பேட்டரிகள் உற்பத்தி நிறுவனம் அமைகிறது. ரூ.16 ஆயிரம் கோடியில் அமையும் இத்தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை தூத்துக்குடியில் நடக்கிறது. இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் முதல்வர் ஸ்டாலின், தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து புதுக்கோட்டை அருகே அமைக்கப்பட்ட பந்தலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார்.