/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துபாயில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி சிகரெட் பறிமுதல்
/
துபாயில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி சிகரெட் பறிமுதல்
துபாயில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி சிகரெட் பறிமுதல்
துபாயில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி சிகரெட் பறிமுதல்
ADDED : ஆக 22, 2025 11:23 PM
துாத்துக்குடி:துபாயிலிருந்து துாத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட, 4 கோடி ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் ஜெபல்அலி துறைமுகத்தி ல் இருந்து, துாத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த சரக்கு கப்பலில், ஒரு கன்டெய்னர், பெங்களூருவை சேர்ந்த நிறுவனத்திற்கு 'வெட் டேட்ஸ்' எனப்படும் ஈரப்பத பேரீச்சம்பழங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த நிறுவனம் குறித்து சோதனை செய்த போது, போலி என, தெரியவந்தது.
கன்டெய்னரை அதிகாரிகள் திறந்து சோதனை செய்தபோது, அதில் பாதி அளவு பேரீச்சம்பழம் பாக்கெட் பண்டல்கள் இருந்தன.
அதற்கு பின்னால் சிகரெட் பெட்டிகள் மறைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
மொத்தம், 1,300 பெட்டிகளில், 2 லட்சம் சிகரெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 4 கோடி ரூபாய்.