/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பொறுப்பற்ற பதில் சொல்லக்கூடாது அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்'
/
பொறுப்பற்ற பதில் சொல்லக்கூடாது அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்'
பொறுப்பற்ற பதில் சொல்லக்கூடாது அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்'
பொறுப்பற்ற பதில் சொல்லக்கூடாது அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்'
ADDED : டிச 20, 2024 01:30 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலத்தில், கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பேசிய விவசாயிகள், 'கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரை காப்பீட்டு தொகை வழங்கவில்லை' என, புகார் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்கும்படி கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டார்.
அப்போது, புள்ளியல் துறை அதிகாரிகளும், வேளாண்மைத் துறை அதிகாரிகளும், மாறி மாறி குறைகளை கூறியதால் கலெக்டர், 'அப்செட்' ஆனார்.
உடனே, “அடுத்த துறை குறித்து குறை கூறுவதை நிறுத்திவிட்டு, காப்பீட்டு தொகை வழங்காததற்கான காரணத்தை மட்டும் கூறுங்கள்,” என, கண்டித்தார்.
அதுபோல, 'கடந்த ஆண்டு வெள்ளத்தில் நான்கு பசு மாடுகள், மூன்று கன்றுகளை இழந்த விவசாயி ஒருவர் தனக்கு இதுவரை நிவாரண தொகை வழங்கவில்லை' எனவும், 'கால்நடை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம், 20க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும், அதிகாரிகள் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை' என்றும் கூறினார்.
'பிரேத பரிசோதனை அறிக்கை வராததால் தான், நிவாரண தொகையை வழங்கவில்லை' என, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
'எந்த விண்ணப்பமும் சம்பந்தப்பட்ட விவசாயியிடம் இருந்து வரவில்லை' என, வருவாய் கோட்டாட்சியர் அலுவலக அதிகாரி பதில் அளித்தார். இதனால் கலெக்டர், 'டென்ஷன்' ஆகிவிட்டார்.
“பொறுப்பற்ற பதில் கூறுவதை முதலில் நிறுத்துங்கள்... அந்த விவசாயிடம் நான்கு பசு மாடுகள், மூன்று கன்றுகள் இருந்ததற்கான ஆவணங்கள் உள்ளன. அவருக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுங்கள்,” என, கோபத்துடன் கூறிய கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கடிந்து கொண்டார்.