UPDATED : அக் 23, 2026 12:00 AM
ADDED : அக் 22, 2026 09:18 PM

அ நிறம் | அளவு
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா, தாப்பாத்தி கிராமத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. புதுார் பகுதியை சேர்ந்த பால்பாண்டி மகன் முனியசாமி, 24, மாரிமுத்து, 34, சுணில், 45, உள்ளிட்டோர் அங்கு தங்கியிருந்து வேலைபார்த்தனர்.
நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்ததும் அங்குள்ள குடிசை வீட்டில் துாங்கி கொண்டிருந்தனர். திடீரென இடி தாக்கியதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மாரிமுத்து, சுணில் ஆகியோர் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எட்டையபுரம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.
