UPDATED : அக் 22, 2026 09:21 PM
ADDED : அக் 22, 2026 08:37 PM

துாத்துக்குடி:
குலசை தசராவில் ஏற்பட்ட தகராறில், எலக்ட்ரீஷியன் வேல்முருகன், 26, என்பவர் கல்லால் தாக்கி கொல்லப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டம், வில்லிகுடியிருப்பை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர், நேற்று முன்தினம் இரவு, குலசேகரன்பட்டினம் தசரா நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அவரிடம் சிலர் வழிப்பறியில் ஈடுபட்டு, பைக் சாவியை பறித்து சென்றனர். இதுகுறித்து, தன் தம்பியான எலக்ட்ரீஷியன் வேல்முருகன் என்பவருக்கு மொபைல்போனில் தொடர்பு கொண்டு, சதீஷ்குமார் தெரிவித்தார்.
அவரும், உறவினர் மாதவன் என்பவரும் அங்கு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு வந்த மர்ம கும்பல், அவர்களிடம் தகராறு செய்து, கற்களால் தாக்கியதில் வேல்முருகன் உயிரிழந்தார். காயமடைந்த மாதவன் சிகிச்சையில் உள்ளார். குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக ஏற்பட்ட தகராறில் சதீஷ்குமாரை சிலர் தாக்கியதாகவும், அதை தடுக்க முயன்ற வேல்முருகன் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, துாத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த காளிராஜ், 45, மற்றும் இளம் சிறார்கள் இருவரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
