/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
வாலிபரிடம் ரூ.33 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது
/
வாலிபரிடம் ரூ.33 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது
ADDED : ஏப் 07, 2025 01:33 AM
துாத்துக்குடி: 'பேஸ்புக்' வாயிலாக அறிமுகமாகி, துாத்துக்குடி வாலிபரிடம், 33 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு, பேஸ்புக் வாயிலாக பெண் அறிமுகமாகி பழகியுள்ளார். தனக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வந்துள்ளதாக கூறிய அந்த பெண், அதற்கு பணம் தேவைப்படுவதாக வாலிபரிடம் கூறியுள்ளார்.
வாலிபர், வங்கி கணக்கு வாயிலாக, 33 லட்சத்து 73,190 ரூபாய் அனுப்பியுள்ளார். பின், அந்த பெண் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது. ஏமாற்றமடைந்த வாலிபர் சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தார்.
விசாரணையில், கேரள மாநிலம், இடுக்கியை சேர்ந்த பாலமுருகன், 32, அவரது மனைவி சேர்ந்து வாலிபரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தம்பதியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே, 2022ல் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் பாலமுருகனை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

