/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மூதாட்டியை மயங்க வைத்து நகை பறித்த தம்பதிக்கு சிறை
/
மூதாட்டியை மயங்க வைத்து நகை பறித்த தம்பதிக்கு சிறை
மூதாட்டியை மயங்க வைத்து நகை பறித்த தம்பதிக்கு சிறை
மூதாட்டியை மயங்க வைத்து நகை பறித்த தம்பதிக்கு சிறை
ADDED : ஜூன் 06, 2025 02:51 AM
துாத்துக்குடி:மூதாட்டியை கோவிலுக்கு அழைத்து செல்வதாகக் கூறி மயக்க மருந்து கொடுத்து நகைகளை பறித்த தம்பதிக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம், செபத்தையாபுரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஜெயபாண்டியன் மனைவி ஜெயலிங்ககனி, 72. இவர், கடந்த 2015 ஏப்ரல் 18ல், ஏரல் சேர்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது, விழுப்புரம் மாவட்டம், பாண்டியன் நகரை சேர்ந்த வாசுதேவன், 69, அவரது மனைவி சங்கரி, 60, அறிமுகமாகினர்.
திருச்செந்துார் கோவிலுக்கு சாமி கும்பிட போகலாம் என, காரில் ஜெயலிங்ககனியை அழைத்துச் சென்ற அந்த தம்பதி, மாதுளை ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவர் அணிந்திருந்த 6 சவரன் நகைகள், மொபைல் போனை பறித்து தப்பினர்.
மயக்கமடைந்த ஜெயலிங்ககனியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஏரல் போலீசார் வாசுதேவனையும், சங்கரியையும் கைது செய்தனர்.
வழக்கின் விசாரணை துாத்துக்குடி மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி பிரீத்தா குற்றம்சாட்டப்பட்ட தம்பதிக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.