தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பலத்த இடி தாக்கியதில் இயேசு சொரூபம் சேதம்

பலத்த இடி தாக்கியதில் இயேசு சொரூபம் சேதம்

பலத்த இடி தாக்கியதில் இயேசு சொரூபம் சேதம்


UPDATED : அக் 20, 2026 08:20 PM

ADDED : அக் 20, 2026 07:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 08:20 PM ADDED : அக் 20, 2026 07:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி:

இடி தாக்கியதில், நுாற்றாண்டை கடந்த சர்ச் கோபுரத்தில் இருந்த இயேசு சொரூபத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.

துாத்துக்குடி மாவட்டத்தில், நேற்று பல இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இடி தாக்கியதில், நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நுாற்றாண்டுகளை கடந்த சின்னக்கோவில் என அழைக்கப்படும் சர்ச் கோபுரத்தில் இருந்த இயேசு சொரூபத்தின் இடதுகை பகுதி சேதமடைந்தது.

இச்சம்பவம், கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொரூபத்தை சீரமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல இடி தாக்கியதில், துாத்துக்குடி பெரியநாயகிபுரத்தை சேர்ந்த மதன்குமார், 24, என்பவர், உடல் கருகி பலியானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us