/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் கோவிலுக்குள் மழைநீர் புகுந்து பக்தர்கள் அவதி
/
திருச்செந்துார் கோவிலுக்குள் மழைநீர் புகுந்து பக்தர்கள் அவதி
திருச்செந்துார் கோவிலுக்குள் மழைநீர் புகுந்து பக்தர்கள் அவதி
திருச்செந்துார் கோவிலுக்குள் மழைநீர் புகுந்து பக்தர்கள் அவதி
ADDED : அக் 16, 2025 11:15 PM
துாத்துக்குடி: கனமழை காரணமாக திருச்செந்துார் முருகன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், துாத்துக்குடி மாவட்டத்தில், துாத்துக்குடி, திருச்செந்துார், கோவில்பட்டி, காயல்பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது.
இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. திருச்செந்துார் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மேற்கு கோபுர வாசல் படிக்கட்டுகள் வழியாக கோவிலுக்குள் புகுந்த மழை நீர், பிரகாரத்தில் தேங்கியது.
கோவில் முன்புள்ள சண்முக விலா ச மண்டபம் வழியாக கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால், தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சிரமமடைந்தனர்.
இதே போல, நெல்லை, குமரி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.