/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் கோவிலில் திருக்கல்யாண மேடை அலங்காரத்தை சிதைத்த பக்தர்கள்

ADDED : அக் 30, 2025 03:32 AM

துாத்துக்குடி:திருச்செந்துார் கோவிலில் நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களிலேயே மேடை அலங்காரத்தை பக்தர்கள் சிதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, சூரசம்ஹாரம் கடந்த 27ல் நடந்தது. ஏழாம் நாளான நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண வைபவம் நடந்தது .
திருக்கல்யாணம் சுவாமி மற்றும் தெய்வானை திருமண மாலை மாற்றியவுடன், கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாணம் மண்டபத்திற்கு சுவாமியும், அம்பாளும் வந்தடைந்தனர்.
அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில் மேள தாளங்கள் முழங்க திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. விழாவிற்காக பல வண்ணப்பூக்கள், தேங்காய், சோளக்கதிர்கள், வாழை மரங்களால் மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
மன வேதனை திருக்கல்யாணம் நடந்து முடிந்த சில நிமிடங்களில், அந்த அலங்காரங்கள் அனைத்தையும் பக்தர்களால் முற்றிலும் அலங்கோலமாக்கப்பட்டு சிதைக்கப்பட்டது. ஏராளமானோர் அலங்கரிக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களையும் போட்டி போட்டு எடுத்து சென்றனர்.
இதனால், அங்கிருந்த மற்ற பக்தர்கள் மன வேதனை அடைந்தனர். பொருட்களை எடுத்து சென்றவர்களை தடுக்க முயன்ற பக்தர்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.