/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
/
3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
ADDED : ஆக 08, 2011 03:56 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் போலீஸ் துறையில் உயர் அதிகாரிகள் முதல் எஸ்.ஐ.,க்கள் வரை இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 30ம் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்களை எஸ்.பி.,நரேந்திரன் நாயர் இடமாற்றம் செய்தார். இந்நிலையில் கோவில்பட்டி, நாசரேத் மற்றும் கயத்தாறு போலீஸ் ஸ்டேசன்களில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்களை நெல்லை சரக டிஐஜி.,வரதராஜூலு இடமாற்றம் செய்துள்ளார். இதன்படி கோவில்பட்டி மேற்கு போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி நாசரேத்திற்கும், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் கோவை மாவட்டத்திற்கும், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கோவில்பட்டி மேற்கு போலீஸ் ஸ்டேசனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

