/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி உண்ணாவிரதம்
/
நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி உண்ணாவிரதம்
நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி உண்ணாவிரதம்
நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி உண்ணாவிரதம்
ADDED : செப் 22, 2011 12:03 AM
பேய்க்குளம் : பேய்க்குளம் அருகே நில மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்து
நிலங்களை மீட்க கோரி உண்ணாவிரதம் நடந்தது.
பேய்க்குளம் அருகே
பனைக்குளத்தில் நில மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு நாள்
அடையாள உண்ணாவிரதம் நடந்தது. சாத்தான்குளம் தாலுகாவிற்குட்பட்ட கருங்கடல்,
பனைக்குளம் உட்பட பல கிராமப்புறங்களில் உள்ள நிலங்களை போலி ஆவணங்கள்
தயாரித்து சுமார் 110 ஏக்கர் விவசாய நிலங்களை கேரளாவைச் சேர்ந்த ஒரு
பால்பண்ணை நிறுவனத்திற்கு விற்பனை செய்தது குறித்து பல புகார்கள்
கூறப்பட்டது. இதுகுறித்து 26.8.11 அன்று தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில்
நிலமோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இன்றுவரை
புகாரின் பேரில் நடவடிக்கையோ, கைதோ செய்யப்படவில்லை. என வே நிலம் அபகரித்த
நபர்மீதும், நிலமோசடிக்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீதும் நடவடிக்கை
எடுக்கக் கோரி நேற்று பனைக்குளத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடந்தது.
உண்ணாவிரதத்திற்கு நிலக்கிழார் தாவீது தலைமை வகித்தார். ஆழ்வை., யூனியன்
கவுன்சிலர் காந்திமதி, கருங்கடல் பஞ்., தலைவர் தங்கசெல்வி, கருங்கடல் பஞ்.,
உறுப்பினர் தங்கராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித உரிமை குடிமக்கள்
இயக்க மாநில அமைப்பாளர் இசக்கிமுத்து நில மோசடி குறித்து பேசினார்.
இதுகுறித்து தகவலறிந்து சாத்தை., தாசில்தார் சங்கர நாராயணன், சாத்தை.,
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வால்சன், கருங்கடல் விஏஓ சத்யராஜ் ஆகியோர்
விரைந்து வந்து உண்ணாவிரத போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் சாத்தை., தாலுகாவில் நிலமோசடியில் ஈடுபட்ட நபர்கள்
பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது என தாசில்தார் உறுதியளித்தார்.
காவல்துறை சார்பில் சம்பந்தப்பட்ட நபர்களை ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை
எடுத்து கைது செய்வோம் என கூறப்பட்டதால் உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக
நிறுத்தப்பட்டது. 1 வாரத்திற்குள் நடவடிக்கை எடுத்து கைது செய்யாத
பட்சத்தில் போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் கூறினர். இதில்
தேவபிச்சை, தர்மராஜ், ஆறுமுகம், முன்னாள் கருங்கடல், பஞ்., தலைவர்
தங்கராஜ், நில க்கிழார்கள் முருகேசன், அரு ள்ராஜ், ஸ்ரீதர் மற்றும்
சுற்றுவட்டார விவசாயிகள், பாதிக்கப்பட்டவர்கள் உட்பட நூற்றுக்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தங்கையா நன்றி கூறினார்.