/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தார்பாய் இல்லாமல் மணல் ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு அபராதம்
/
தார்பாய் இல்லாமல் மணல் ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு அபராதம்
தார்பாய் இல்லாமல் மணல் ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு அபராதம்
தார்பாய் இல்லாமல் மணல் ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு அபராதம்
ADDED : செப் 22, 2011 12:09 AM
எட்டயபுரம் : தினமலர் செய்தி எதிரொலியால் மணல் லோடு ஏற்றிச் செல்லும்
லாரிகளில் தார்பாய் போட்டு மூடி கொண்டு செல்லாத வாகனங்கள் 15க்கு அபராதம்
விதித்து கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மணல் லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளில் தார்பாய் போட்டு மூடி கொண்டு செல்ல
வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை அமல்படுத்தாத
மணல் லாரிகள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டுமென தினமலரில் செய்தி வெளியானது. தினமலர் செய்தி எதிரொலியாக துரித
நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மணல் லோடு ஏற்றிச்
செல்லும் லாரிகளில் தார்பாய் போட்டு மூடிக் கொண்டு செல்லவேண்டும் என
மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் உத்தரவிட்டதன் பேரில் தூத்துக்குடி வட்டார
போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம் அறிவுரையின் பேரில் கோவில்பட்டி மோட்டார்
வாகன ஆய்வாளர் சிவகுமார், பிடபிள்யூ உதவி பொறியாளர் மணிவண்ணன் ஆகியோர்
சம்பந்தப்பட்ட மணல் குவாரிகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தார்பாய் போட்டு மூடித்தான் மணல் லோடு லாரிகள் செல்ல வேண்டுமென
கிடுக்கிப்பிடி போட்டு ஆய்வு மேற்கொண்டனர். மணல் லாரிகள் லோடு ஏற்றி வரும்
போது தார்பாய் போட்டு மூடி வருகிறதா என கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு
பகுதிகளில் கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் திடீர் வாகன
சோதனை மேற்கொண்டார். இதில் மணல் லோடு லாரிகள் தார்பாய் போட்டு மூடாமல் வந்த
15 லாரிகள் பிடிபட்டது. அந்த லாரிகளுக்கு அபதாரம் விதிக்கப்பட்டது. இதன்
காரணமாக எட்டயபுரம் பகுதியில் செல்லும் மணல் லோடு லாரிகள் தார்ப்பாய்
போட்டு மூடிச் செல்வதை பார்த்து பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் மற்றும்
வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர்.