/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கோவில்பட்டியில் ஷேர் ஆட்டோவுக்கு அனுமதி வழங்க வேண்டும்
/
கோவில்பட்டியில் ஷேர் ஆட்டோவுக்கு அனுமதி வழங்க வேண்டும்
கோவில்பட்டியில் ஷேர் ஆட்டோவுக்கு அனுமதி வழங்க வேண்டும்
கோவில்பட்டியில் ஷேர் ஆட்டோவுக்கு அனுமதி வழங்க வேண்டும்
ADDED : செப் 23, 2011 01:04 AM
கோவில்பட்டி : கோவில்பட்டியில் ஷேர் ஆட்டோவிற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாநில மாநாடு விளக்க பேரவை கூட்டம்
நடந்தது. கோவில்பட்டி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்த
கூட்டத்திற்கு சங்க வட்டத் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். துணைத்
தலைவர்கள் பாலு, அர்ச்சுணன், இணைச் செயலாளர் நம்பிராஜ் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். வட்ட செயலாளர் அய்யலுசாமி வரவேற்றார். தொட ர்ந்து மாநில தலைவர்
கெங்காதரன் கலந்து கொண்டு பேசினார். மேலும் ஓய்வூதியர்களிடம் கம்யூட்டேசன்
பிடித்தø த 12 ஆண்டுகளாக குறைக்கவும், மருத்துவப்படியை 500 ஆக்கவும்,
அரசாணை 371ஐ அமல்படுத்தவும், குடும்ப பாதுகாப்பு நிதியை 1 1/2 லட்சமாக
உயர்த்தவும், கிராம உதவியாளர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு
ரூ.3050 ஓய்வூதியம் வழங்கவும், பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்காக
போலீசாரை கண்டித்தும், போலீஸ்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும்,
கோவில்பட்டி இரண்டாவது பைப் லைன் திட்டத்தை நிறைவேற்றவும், நகரில் ஷேர்
ஆட்டோவிற்கு அனுமதி வழங்கவும் வலியுறுத்தி தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.வட்ட பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார். கூட்டத்தில்
மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன், செயலாளர் அல்போன்ஸ்லிகோரி, பொருளாளர்
காஜாமுகைதீன், வட்ட துணைத் தலைவர் மகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.