/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
10ம் நுாற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
/
10ம் நுாற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
10ம் நுாற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
10ம் நுாற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
ADDED : நவ 04, 2024 11:07 PM

துாத்துக்குடி; துாத்துக்குடியை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி, சென்னை கிறிஸ்தவ கல்லுாரி தொல்லியல் பிரிவு மூன்றாம் ஆண்டு மாணவர் ஜேன் பினகேஷ் ஆகியோர் பட்டினமருதுார் தென்பகுதியில் உள்ள ஸ்ரீவீரபாண்டிய விநாயகர் கோவில் அருகே மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஒரு கல் துாணில் இருபுறமும் தமிழ்- வட்டெழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளதை கண்டெடுத்தனர். அவர்கள் கூறியதாவது:
வட்டெழுத்து வடிவங்களை ஒப்பீடு செய்து பார்த்தபோது, 8 - 10ம் நுாற்றாண்டின் கால கட்டத்தை சேர்ந்தது போன்ற எழுத்து வடிவங்கள் தென்பட்டன. கல் துாணில் சில இடங்கள் சேதமடைந்துள்ளன. எழுத்துகள் விடுபட்டுள்ளதால், சென்னை கிறிஸ்தவ கல்லுாரியில் வைத்து ஆய்வு செய்யப்பட்ட பிறகே அதில் தெரிவிக்கப்பட்ட விபரம் தெரியவரும்.
மேலும், தருவைகுளத்தில் சதிகல் என அழைக்கப்படும் நினைவுக்கல் ஒன்றையும் கண்டறிந்துள்ளோம். ஒருபுறம் வலது கையில் கீழ்நோக்கிய வாளுடன் அரசன் மற்றும் அரசியும், மறுபுறம் துறவி போன்ற சிற்பமும் காணப்படுகிறது.
தொன்மையான மணல் கலவை சிற்பம் போன்றுள்ளது. இரண்டு முதல் ஏழாம் நுாற்றாண்டு காலக்கட்டத்தை சேர்ந்ததாக இருக்கலாம். இந்த தகவல்களை இந்திய தொல்லியல்துறையின் திருச்சி மண்டல அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

