தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்துக்கு 'டெண்டர்' விடப்பட்டதால் சர்ச்சை

 கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்துக்கு 'டெண்டர்' விடப்பட்டதால் சர்ச்சை

 கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்துக்கு 'டெண்டர்' விடப்பட்டதால் சர்ச்சை


ADDED : செப் 20, 2026 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 11:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: பொதுப்பணித்துறையில், இரண்டு கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின், 'டெண்டர்' கோரப்பட்டு இறுதி செய்யப்பட்ட சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது:

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அரசு மருத்துவமனையில், தாய் - -சேய் நலம் மற்றும் விபத்து சிகிச்சை பிரிவில், 31 லட்சம் ரூபாய் செலவில், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கும், துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி நுாலக கட்டடத்தின், இரண்டாம் தளத்தில், 16 லட்சம் ரூபாய் செலவில் பல்கலை ஆராய்ச்சி மையம் அமைத்தல் ஆகிய பணிகளுக்கும், ஆக., 25ல் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

துாத்துக்குடியில் உள்ள பொதுப்பணித்துறை கட்டடங்கள் பிரிவு செயற்பொறியாளர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, செப்., 18ல் டெண்டர் திறக்கப்பட்டது. ஆனால், இரண்டு பணிகளுமே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டன.

கடந்த தி.மு.க., ஆட்சியில் எந்தவித டெண்டர் அறிவிப்பும் வெளியிடப் படாமல், பணிகள் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. அந்த பணிகளை செய்த ஒப்பந்ததாரர்களுக்கு, டெண்டர் கிடைக்காமல், வேறு நபர்கள் எடுத்திருப்பதால், இந்த விவகாரத்தை மூடி மறைக்கும் முயற்சியில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே வேலையை செய்து முடித்த ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்குகளுக்கு தான், அரசு கணக்கில் இருந்து, பணம் செலுத்தப்படும் என்பதால், தற்போது டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us