தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ பெண்ணை வீட்டிற்குள் பூட்டிய மத போதகர் மீது வழக்குப்பதிவு

 பெண்ணை வீட்டிற்குள் பூட்டிய மத போதகர் மீது வழக்குப்பதிவு

 பெண்ணை வீட்டிற்குள் பூட்டிய மத போதகர் மீது வழக்குப்பதிவு


ADDED : செப் 19, 2026 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 11:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: இளம்பெண்ணை வீட்டிற்குள் பூட்டிய கிறிஸ்துவ மத போதகர் ராபின்சன், 57, உட்பட, ஏழு பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார், ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் ஜான்சுந்தர்சிங், 54. அதே பகுதியில் உள்ள சர்ச்சில் சபை ஊழியர். இவரை, சபை ஊழியர் பணியில் இருந்து நீக்கக்கூறி, சர்ச் நிர்வாகத்தில் இருதரப்பினராக செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில், ஜான்சுந்தர்சிங்கை தேடி, அவரது வீட்டிற்கு ஆரோக்கியபுரம் சர்ச் மதபோதகர் ராபின்சன், சர்ச் நிர்வாகிகள் திரித்துவராஜ், 35, கரோலின். 38, ஜான்சன், 45, உட்பட, ஏழு பேர், நேற்று முன்தினம் சென்றனர்.

ஜான்சுந்தர்சிங் இல்லாத நிலையில், தனியாக இருந்த அவரது மகள் ஜெரின்ஸ்டா, 23, என்பவரை, வீட்டிற்குள் வைத்து பூட்டி, சிறை வைத்து சென்றனர்.

மெஞ்ஞானபுரம் போலீசார், பூட்டை உடைத்து ஜெரின்ஸ்டாவை மீட்டனர். ராபின்சன் உட்பட, ஏழு பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us