/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தி.மு.க., -- எம்.எல்.ஏ., அண்ணன் மீது மேலும் ஒரு நில மோசடி வழக்கு பதிவு
/
தி.மு.க., -- எம்.எல்.ஏ., அண்ணன் மீது மேலும் ஒரு நில மோசடி வழக்கு பதிவு
தி.மு.க., -- எம்.எல்.ஏ., அண்ணன் மீது மேலும் ஒரு நில மோசடி வழக்கு பதிவு
தி.மு.க., -- எம்.எல்.ஏ., அண்ணன் மீது மேலும் ஒரு நில மோசடி வழக்கு பதிவு
ADDED : ஜூன் 01, 2025 11:24 PM
துாத்துக்குடி,:சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க., - எம்.எல்.ஏ., அண்ணன் மீது, முன்னாள் பஞ்., தலைவர் நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, அயிரவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், 57; தொழிலதிபர். இவர், தி.மு.க., - எம்.எல்.ஏ., சண்முகையாவின் அண்ணன்.
சிலோன் காலனி பகுதியில் உள்ள 4 ஏக்கர் நிலத்தை, தன் பெயருக்கு எழுதி கேட்டு, முத்து மாடத்தி என்ற பெண்ணை மிரட்டியதாக, மே 29ல் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின், அவர் பாளை., மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டப்பிடாரம் பஞ்., முன்னாள் தலைவரும், தி.மு.க., ஒன்றிய செயலருமான இளையராஜா என்பவர், மாவட்ட குற்றப்பிரிவில் ஜன., 13ல் அளித்த புகாரில், நிலமோசடி மற்றும் கொலை மிரட்டல் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீசார் கூறியதாவது:
இளையராஜாவுக்கு சொந்தமான நிலத்தின் அருகே முருகேசனுக்கும் நிலம் உள்ளது. அந்த நிலத்தை சோலார் நிறுவனத்திற்கு முருகேசன் விற்பனை செய்துள்ளார். அவரது நிலத்தின் நான்கு புற எல்லைகளை சரியாக குறிப்பிடாமல், இளையராஜாவுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து சேர்த்து, முருகேசன் விற்பனை செய்துள்ளார்.
அவருக்கு உடந்தையாக சார்-பதிவாளர் தனசேகரன், வி.ஏ.ஓ., செல்வகணேஷ் உட்பட ஏழு பேர் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீதும் நிலமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.