/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
வாட்ஸாப்பில் பீதி ஏற்படுத்திய தி.மு.க., கவுன்சிலரின் கணவர்
/
வாட்ஸாப்பில் பீதி ஏற்படுத்திய தி.மு.க., கவுன்சிலரின் கணவர்
வாட்ஸாப்பில் பீதி ஏற்படுத்திய தி.மு.க., கவுன்சிலரின் கணவர்
வாட்ஸாப்பில் பீதி ஏற்படுத்திய தி.மு.க., கவுன்சிலரின் கணவர்
ADDED : டிச 15, 2024 12:25 AM
துாத்துக்குடி,:துாத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். கடந்த ஆண்டு டிச., 17 மற்றும் 18ம் தேதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. அதே போல, இந்த ஆண்டும் தண்ணீர் சூழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் மாநகர மக்கள் உள்ளனர். அவர்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில் தி.மு.க., கவுன்சிலரின் கணவர் ஒருவர் வாட்ஸாப்பில் வெளியிட்ட ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துாத்துக்குடி மாநகாட்சி 19வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சோமசுந்தரியின் கணவர் ஆல்வின் என்பவர், வாட்ஸாப் செயலியில் வெளியிட்ட ஆடியோவில், 'காட்டாற்று வெள்ளம் ரொம்ப வேகமாக வருகிறது; வெள்ளம் வருவதற்கு 95 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன. அனைவரும் தங்களது விலை உயர்ந்த உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
'கடந்த முறை யார் வீட்டுக்குள் தண்ணீர் வந்ததோ, அவர்கள் இப்போதே பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள். கலைஞர் அரங்கத்தில் இடம் உள்ளது. சாப்பாடு தயாராக உள்ளது. அங்கு வந்துவிடவும்' என பேசி, அதை பரவ விட்டார்.
மாநகர மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
இதையடுத்து, மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்ட செய்தியில், 'நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்' என, 'அப்டேட்' கொடுத்தார். அதன் பிறகே மக்கள் ஓரளவு சகஜ நிலைக்கு திரும்பினர்.