/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திமுக முன்னோடிகள் 100 பேர்களுக்கு பொற்கிழி
/
திமுக முன்னோடிகள் 100 பேர்களுக்கு பொற்கிழி
UPDATED : டிச 08, 2024 11:43 AM
ADDED : டிச 08, 2024 11:20 AM

தூத்துக்குடி: தி.மு.க ஆதிதிராவிடர் நலக்குழு, தென்மண்டல ஆய்வுக்கூட்டம் மற்றும் நலிவுற்ற ஆதிதிராவிடர் கழக முன்னோடிகள் 100 நபர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி ஆதிதிராவிடர் நலக்குழு மாநில செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி, எம்.எல்.ஏ., தலைமையில் நடைப்பெற்றது.
திமுக துணைப்பொது செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை , பெ.கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன் , மாநகர மேயர் ஜெகன் , சிறப்புரையுடன், ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் இராசன் வரவேற்புரையாற்றிட, துணை செயலாளர் மாரியப்பன் கென்னடி முன்னிலை வகித்தனர்.
ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர்கள் மருதூர் இராமலிங்கம், புஷ்பராஜ், திப்பம்பட்டி ஆறுசாமி, துணை செயலாளர்கள் துரைசாமி, பொன்தோஸ், அரூர் சா.இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.