/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
போதை மறுவாழ்வு மைய நிர்வாகியின் மகன் ஒரு கிலோ கஞ்சாவுடன் கைது
/
போதை மறுவாழ்வு மைய நிர்வாகியின் மகன் ஒரு கிலோ கஞ்சாவுடன் கைது
போதை மறுவாழ்வு மைய நிர்வாகியின் மகன் ஒரு கிலோ கஞ்சாவுடன் கைது
போதை மறுவாழ்வு மைய நிர்வாகியின் மகன் ஒரு கிலோ கஞ்சாவுடன் கைது
ADDED : டிச 28, 2025 04:11 AM

துாத்துக்குடி: கஞ்சாவுடன் சிக்கிய, போதை மறுவாழ்வு மைய நிர்வாகியின் மகன் கைது செய்யப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜிவ்நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ். போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருகிறார். இவரது மகன் புஷ்பராஜ், 19; பி.எஸ்.சி., மூன்றாமாண்டு படிக்கிறார்.
கோவில்பட்டி கிழக்கு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்ற போது, சந்தேகப்படும்படியாக நின்ற புஷ்பராஜ் மற்றும் அவரது நண்பரான மதுரை, தனக்கன்குளத்தை சேர்ந்த மணிமாறன், 23, ஆகியோரை பிடித்து சோதனையிட்டதில், அவர்களிடம், ஒரு கிலோ கஞ்சா இருந்தது.
விசாரணையில், மதுரையில் இருந்து மணிமாறன் கொண்டு வரும் கஞ்சாவை, தன்னுடன் பயிலும் மாணவர்களுக்கு 'சப்ளை' செய்வதற்காக புஷ்பராஜ் திட்டமிட்டிருந்தது தெரிந்தது. போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
தந்தை போதை மறுவாழ்வு மையம் நடத்தி வரும் நிலையில், அவரது மகன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.