/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
குலசை கோவிலுக்கு சென்ற தசரா குழுவினர் சிறைபிடிப்பால் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
/
குலசை கோவிலுக்கு சென்ற தசரா குழுவினர் சிறைபிடிப்பால் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
குலசை கோவிலுக்கு சென்ற தசரா குழுவினர் சிறைபிடிப்பால் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
குலசை கோவிலுக்கு சென்ற தசரா குழுவினர் சிறைபிடிப்பால் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
ADDED : அக் 13, 2024 07:12 AM
துாத்துக்குடி, : துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு நடந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு வேடமணிந்த தசரா குழு பக்தர்கள், மெஞ்ஞானபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு காணிக்கை வசூல் செய்தனர்.
அப்போது, அங்கு சென்ற சாத்தான்குளம் டி.எஸ்.பி., சுபகுமார் அவர்களை எச்சரித்ததுடன், மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தசரா குழுவினர் காவல் நிலையத்தில் சிறைபிடிக்கப்பட்ட தகவல் பரவியதும், ஏராளமானோர் மெஞ்ஞானபுரம் காவல் நிலையம் முன் திரண்டனர்.
காணிக்கை
சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவத்துக்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. ஹிந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கூறியதாவது:
சாத்தான்குளம் தாலுகா, மெஞ்ஞானபுரம் அருகே ராமசுப்ரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த தசரா குழுவினர், பல்வேறு வேடமணிந்து மெஞ்ஞானபுரம் பஜாரில் காணிக்கை பெற்றுக் கொண்டிருந்தனர்.
சாத்தான்குளம் டி.எஸ்.பி., சுபகுமார் தசரா குழுவினரை தகாத வார்த்தைகளில் பேசியதோடு, மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
'என்ன தவறு செய்தோம்' என தசரா குழுவினர் கேட்டதற்கு பதில் கூறாமல், 'நான் சொன்னபின், இவர்களை விட்டால் போதும்' என்று காவல் நிலைய அதிகாரிகளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
தசரா குழுவினர் மற்றும் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
நடவடிக்கை
தசரா குழுவினரை காவல் நிலையத்தில் சிறை வைத்த டி.எஸ்.பி.,யின் செயல் கண்டனத்திற்குரியது. இவரை போன்றவர்களால் தான் காவல்துறைக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுகிறது. டி.எஸ்.பி., சுபகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.