/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சாலையில் தொங்கிய மின்கம்பி கழுத்தில் சிக்கி விவசாயி பலி
/
சாலையில் தொங்கிய மின்கம்பி கழுத்தில் சிக்கி விவசாயி பலி
சாலையில் தொங்கிய மின்கம்பி கழுத்தில் சிக்கி விவசாயி பலி
சாலையில் தொங்கிய மின்கம்பி கழுத்தில் சிக்கி விவசாயி பலி
ADDED : ஜன 27, 2025 07:33 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், சிவஞானபுரம் பஞ்.,குட்பட்ட வாகைகுளம் கிராமத்தில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. அப்பகுதியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் இருந்து அறுந்த கம்பி, தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தது.
அப்பகுதி மக்கள் புகார் அளித்தும், மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் தாமதித்தனர். நேற்று அதிகாலை அப்பகுதியை சேர்ந்த விவசாயி முருகன், 40, தன் தோட்டத்திற்கு அவ்வழியாக சென்றுள்ளார்.
எதிர்பாராதவிதமாக அவரது கழுத்து பகுதியில் மின்கம்பி சிக்கியதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சில மணி நேரம் கழித்தே அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து மின்வாரிய அதிகாரிகளுக்கும், கயத்தாறு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
விடுமுறை நாள் என்பதால் தகவல் தெரிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கும் பின்னரே மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்சாரத்தை துண்டித்தனர். அதன் பிறகே போலீசார் முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கயத்தாறு போலீசார் விசாரிக்கின்றனர். அலட்சிய மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.