/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பயிர் இழப்பீடு கணக்கெடுப்பில் பாரபட்சம்: விவசாயிகள் குமுறல்
/
பயிர் இழப்பீடு கணக்கெடுப்பில் பாரபட்சம்: விவசாயிகள் குமுறல்
பயிர் இழப்பீடு கணக்கெடுப்பில் பாரபட்சம்: விவசாயிகள் குமுறல்
பயிர் இழப்பீடு கணக்கெடுப்பில் பாரபட்சம்: விவசாயிகள் குமுறல்
ADDED : பிப் 01, 2025 01:54 AM
துாத்துக்குடி:மழைக்கு அழுகிய பயிர்களுக்கு காப்பீடு பெற கணக்கெடுப்பு செய்யும் இன்சூரன்ஸ் நிறுவன பணியாளர்கள், பாரபட்சமாக செயல்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, துாத்துக்குடி, கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
துாத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, புள்ளியியல் துறை மற்றும் இன்சூரன்ஸ் நிறுவன கள பணியாளர்கள் இணைந்து பயிர் அறுவடையை கணக்கெடுப்பு செய்கின்றனர். அதன் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்படும்.
டிச., 12ம் தேதி பெய்த கனமழையால் வெங்காயம், கொத்தமல்லி, உளுந்து, பாசிப்பயறு கடுமையாக சேதமடைந்தது; செடிகள் அழுகிவிட்டன. முளைத்த தடயம் கூட தெரியவில்லை. அரசு துறையினருடன் கணக்கீடு செய்ய வரும் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் அடாவடியில் ஈடுபடுகின்றனர்.
மழையால் நிலத்தில் செடிகள் அழுகிப்போன இடத்தில், வேறு பகுதியில் இருந்து திரட்சியான செடிகளை பறித்து ஊன்றினால் தான் கணக்கெடுப்பு அறிக்கையில் கையொப்பமிடுவோம் என, கூறுகின்றனர். நன்கு முளைத்து விளைந்த செடிகள் அழுகி விட்டது தெரிந்தும், அதை ஏற்க மறுக்கின்றனர்.
உண்மை நிலை தெரிந்தும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படும் இன்சூரன்ஸ் களப்பணியாளர்களை, அந்நிறுவனம் திரும்பப்பெற வேண்டும். நடுநிலையோடு செயல்படும் பணியாளர்களை கொண்டு பயிர் அறுவடை கணக்கெடுப்பு செய்ய வேண்டும்.
கலெக்டர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.