தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ மதுபோதையில் தகராறு செய்த மகனை கொன்ற தந்தை கைது

 மதுபோதையில் தகராறு செய்த மகனை கொன்ற தந்தை கைது

 மதுபோதையில் தகராறு செய்த மகனை கொன்ற தந்தை கைது


ADDED : ஆக 26, 2026 03:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 03:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எப்போதும் வென்றான்: மது போதையில் தகராறு செய்த கருப்பசாமி, 21, என்பவரை, அரிவாளால் வெட்டி கொன்ற அவரது தந்தை மாரிமுத்து, 50, கைது செய்யப்ப ட்டார்.

துாத்துக்குடி மாவட்டம், ஆதனுாரை சேர்ந்தவர் மாரிமுத்து, ஆட்டோ ஓட்டுநர். இவரது மகன் கருப்பசாமி. பைக் மெக்கானிக். அவருக்கு, வீட்டின் அருகே மாரிமுத்து ஒர்க் ஷாப் அமைத்து கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, மதுபோதையில் வீட்டிற்கு வந்த கருப்பசாமி, மாரிமுத்துவிடம் தகராறு செய்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த மாரிமுத்து, அரிவாளால் கருப்பசாமியை வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

எப்போதும் வென்றான் போலீசார், கருப்பசாமியின் உடலை மீட்டு, துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்து, மாரிமுத்துவை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us