தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ மின்சாரம் பாய்ச்சி 2 குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை

 மின்சாரம் பாய்ச்சி 2 குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை

 மின்சாரம் பாய்ச்சி 2 குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை


ADDED : ஜூலை 11, 2026 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2026 01:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், இரண்டு குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்த தந்தை, தன் உடலிலும் மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், சவேரியார்புரம், சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய மைக்கேல், 45. கார் டிரைவர்.

இவரது ம னைவி சவிதா ரோனிக். தம்பதிக்கு மரிய நிரோஷா, 14, என்ற மகளும், கெனிஸ்டன், 12, என்ற மகனும் இருந்தனர். இருவரும் அந்த பகுதியில் உள்ள த னியார் பள்ளியில் ஒன்பதாம், ஏழாம் வகுப்பு படித்தனர்.

சில மாதங்களுக்கு முன், சவிதா ரோனிக், அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒருவருடன் வெளியூருக்கு சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட மரிய மைக்கேல், வேலைக்கு சரியாக செல்லாமல் குழந்தை களுடன் வசித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, குழந்தைகளுக்கு சிக்கன் உள்ளிட்ட உணவுகளை வாங்கி கொடுத்துள்ளார். அவரும் உணவு சாப்பிட்டுவிட்டு துாங்கச் சென்றுள்ளார்.

நள்ளிரவில் குழந்தைகள் நன்றாக துாங்கி கொண்டிருந்த போது, மின்சார ஒயரை இரண்டு குழந்தைகள் கை மற்றும் கால்களில் கட்டி, மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளார்.

அதன்பின், அவரது உடலிலும் ஒயரை கட்டிக் கொண்டு, மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.

மரிய மைக்கேல் தந்தை அந்தோணி முத்து வீட்டிற்கு வெளியே படுத்துள்ளார். நேற்று காலை வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால், அந்தோணி முத்து பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் மூலம் புதுக் கோட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு தெரிவி த்தார்.

போலீசார் சென்று கதவை உடைத்து பார்த்தபோது, மூவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. மூவரின் உடலையும் போலீ சார் மீட்டு விசாரிக்கின்றனர். இந்த ச ம்பவம், கிராம மக்களிடையே சோகத்தை ஏற்ப டுத்தியது.

மரிய நிரோஷா

கெனிஸ்டன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us