சதுரகிரி மலையில் துாத்துக்குடி பக்தர் உயிரிழப்பு
சதுரகிரி மலையில் துாத்துக்குடி பக்தர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 15, 2026 06:35 AM
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய மலையேறிய துாத்துக்குடி பக்தர் சுப்பிரமணியன் 54, மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
துாத்துக்குடி கே.டி.சி., நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர், மினரல் வாட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஆனி மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு நேற்று காலை நண்பருடன் சதுரகிரிக்கு வந்து, அடிவாரத்தில் இருந்து மலை ஏறினார்.
கோண தலை வாசல் அருகே நடந்து சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். பின்னர் டோலி மூலம் அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல், பிரேத பரிசோதனைக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சாப்டூர் போலீசார் விசாரித்தனர். பக்தர்கள் அனுமதிக்கப்படும் அனைத்து நாட்களிலும் அடிவாரம் முதல் கோயில் வரை மருத்துவக்குழுவை நியமிக்க மதுரை கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
