/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் மர கிடங்கில் தீ விபத்து ரூ.15 கோடி மரத்தடிகள் எரிந்து சாம்பல்

ADDED : அக் 26, 2024 08:45 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 45; திருச்செந்துார் --- காயல்பட்டினம் சாலையில் வீரபாண்டியன்பட்டினம் அருகே மரக்கடை நடத்தி வருகிறார். கடையையொட்டி கிடங்கும் உள்ளது. தேக்கு, வேங்கை, கோங்கு போன்ற விலையுயர்ந்த மரத்தடிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
நேற்று அதிகாலை, திடீரென கிடங்கில் தீப்பிடித்தது. அங்கு யாரும் இல்லாததால், தீ வேகமாக பரவியது.
தீ விபத்து குறித்து அப்பகுதியினர், திருச்செந்துார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயை கட்டுப்படுத்த முடியாததால், சாத்தான்குளம், துாத்துக்குடி, ஆறுமுகநேரியில் உள்ள டி.சி.டபிள்யூ., தனியார் தொழிற்சாலை தீயணைப்பு வாகனம் என, ஐந்து வாகனங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் மனோ பிரசன்னா தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், கிடங்கில் இருந்த மரத்தடிகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாயின. இதில், 15 கோடி ரூபாய் மதிப்பிலான மரத்தடிகள் சாம்பலானதாக கூறப்படுகிறது. திருச்செந்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.