/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தமிழகத்தில் முதல் முறையாக மேம்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்
/
தமிழகத்தில் முதல் முறையாக மேம்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்
தமிழகத்தில் முதல் முறையாக மேம்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்
தமிழகத்தில் முதல் முறையாக மேம்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்
ADDED : மார் 18, 2025 06:26 AM

துாத்துக்குடி: தமிழகத்தில் முதல் முறையாக தேசிய நெடுஞ்சாலையில், 24 மணி நேர மேம்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் சேவை துாத்துக்குடியில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால், மேம்படுத்தப்பட்ட இலவச அவசர கால ஊர்தி பணிகளை மேற்கொள்ள ஹிந்துஸ்தான் லைப் கேர் லிமிடெட் நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதல்முறையாக துாத்துக்குடி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்காக இந்த சேவை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
கலெக்டர் இளம்பகவத் கூறியதாவது:
இந்த ஆம்புலன்சில் கார்டியாக் மானிட்டர்ஸ், வென்டிலேட்டர்ஸ், டீபிப்ரிலேட்டர் ஆகிய தீவிர சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவக்குழு பணியில் இருப்பர். சேவையை பயன்படுத்த, மக்கள் 1033 என்ற கட்டணமில்லா எண்ணில் அழைக்கலாம்.
மதுரை --- துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், புதுார் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் இருக்கும். இருபுறமும் 60 கி.மீ., துாரத்திற்கு சேவை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.