ADDED : மார் 09, 2026 10:04 PM
துாத்துக்குடி : மீன்பிடிக்கச் சென்ற மீனவர், எதிர்பாராத விதமாக கடலுக்குள் தவறி விழுந்து, மூச்சுத்திணறி, உயிரிழந்தார்.
துாத்துக்குடி முத்தரையர் நகரைச் சேர்ந்த மாயாண்டி, 26, என்ற மீனவர், சக மீனவர்கள் நால்வருடன், நேற்று முன்தினம், கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். திரேஸ்புரத்தில் இருந்து பகவதி என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற அவர்கள், கிழக்கே, 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, மாயாண்டி எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்துள்ளார். சக மீனவர்கள் அவரை உடனடியாக மீட்டு, அரசு மருத்துவக் கல்லுாாி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து, துாத்துக்குடி மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர். மாயாண்டி, தலைகுப்புற கடலுக்குள் விழுந்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே, முழு விபரம் தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.
