ADDED : ஏப் 07, 2026 10:13 PM
அ நிறம் | அளவு
துாத்துக்குடி: குடும்பத் தகராறில் மாஜி ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வடக்கு மயிலோடை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், 37. ராணுவத்தில் பணியாற்றி வந்த இவர், சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்று சொந்த ஊருக்கு வந்தார். மனைவி பரமேஸ்வரி மற்றும் 5 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இருவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. பரமேஸ்வரி கோபித்துக் கொண்டு மகனுடன் கோவையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். தனியாக வீட்டில் இருந்த சுரேஷ் நேற்று திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ் தற்கொலை தொடர்பாக, கயத்தாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
