ADDED : செப் 28, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: துாத்துக்குடி சக்திவினாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் தனசிங், 43. ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்த இவர் மீது, தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், 2017ல் காவல் துறையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.
தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்த சுரேஷ் தனசிங், இரண்டு சிறுமிகளுக்கு தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சிறுமிகள் புகாரின்படி, துாத்துக்குடி போலீசார், போக்சோவில் சுரேஷ் தனசிங்கை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.