ADDED : ஜன 25, 2026 07:03 AM
அ நிறம் | அளவு
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாலாட்டின்புதுார் பகுதியை சேர்ந்த வியாபாரி ஜேசுராஜ், 54, என்பவர், பலரிடம் கடன் வாங்கி தொழில் செய்து வருகிறார். வடக்கு திட்டங்குளத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சங்கரபாண்டியன், 36, என்பவரிடம் 10,000 ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.
வாரம் 1,000 ரூபாய் வட்டி என்ற அடிப்படையில், ஜேசுராஜ் 34,000 ரூபாய் திரும்ப செலுத்தியபோதிலும், அசல் தொகை இன்னும் வரவில்லை என, சங்கரபாண்டியன் அவரிடம் தகராறு செய்துள்ளார்.
இதுகுறித்து, ஜேசுராஜ் புகாரின்படி, நாலாட்டின்புதுார் போலீசார், கந்துவட்டி வழக்கில் சங்கரபாண்டியனை நேற்று கைது செய்து, கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.
