/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் கோவிலில் கந்தசஷ்டி பாராயணம்!
/
திருச்செந்துார் கோவிலில் கந்தசஷ்டி பாராயணம்!
ADDED : நவ 04, 2024 07:56 PM

திருச்செந்தூர்: கந்த சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நெல்லையைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கந்த சஷ்டியை முன்னிட்டு சஷ்டி கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடந்தது. கந்த சஷ்டி மூன்றாம் நாளான இன்று பிற்பகலில் சண்முக விலாசம் மண்டபத்தில் வள்ளி, தேவசேனா அம்மனுடன் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். அப்போது சுவாமி முன்பு திருநெல்வேலி சங்கர் நகர் ஜெயேந்திரா கோல்டன் ஜூப்லி மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த 108 மாணவ, மாணவியர்கள் மற்றும் சாரதா மகளிர் கலைக்கல்லூரியை சேர்ந்த 55 மாணவிகள் ஒருங்கே சேர்ந்து பக்தி பரவசத்துடன் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். இதனை திருக்கோயில் தக்கார் அருள்முருகன் தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலைக் குழு உறுப்பினர் தேச மங்கையர்கரசி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், மண்டல இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் அஜித், நெல்லையப்பர் கோயில் அறங்காவலர் உஷா ராமன், சாரதா மகளிர் கல்லூரி மேலாளர் ரமணகிரி, நெல்லை சகஸ்ர நாம மண்டலி ஒருங்கிணைப்பாளர் சிதம்பரநாதன், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.