/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கவின் கொலை வழக்கு: எஸ்.ஐ., ஜாமின் மனு
/
கவின் கொலை வழக்கு: எஸ்.ஐ., ஜாமின் மனு
ADDED : நவ 13, 2025 06:18 AM
மதுரை: துாத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கவின். ஐ.டி.,நிறுவன ஊழியர். இவர் ஒரு பெண்ணை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். பெண்ணின் சகோதர் சுர்ஜித். இவர் திருநெல்வேலியில் கவினை கொலை செய்தார். அவர் போலீசில் சரணடைந்தார்.
சுர்ஜித்தின் தந்தையான எஸ்.ஐ.,சரவணன் கைது செய்யப்பட்டார். சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரிக்கின்றனர். சரவணன்,'சம்பவத்தன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை.
கைதாகி 98 நாட்களாகிறது. ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி கே.முரளிசங்கர் சி.பி.சி.ஐ.டி.,தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு நவ.18 க்கு ஒத்திவைத்தார்.

